தினத்தந்தி 08.07.2013
அன்னூர் வாரச்சந்தையில் ‘பிளாஸ்டிக்’ பைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அதிகாரி எச்சரிக்கை
அன்னூரில் உள்ள வாரச்சந்தையில், பேரூராட்சி செயல் அலுவலர்
கல்யாணசுந்தரம் தலைமையில் துணைத்தலைவர் விஜயகுமார், துப்புறவு
மேற்பார்வையாளர் மற்றும் துப்புறவு பணியாளர்கள் 15 பேர் கொண்ட குழுவினர்
திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கடைகளில் தடை
செய்யப்பட்டுள்ள 40 மைக்ரான் குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்
படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள்
பறிமுதல் செய்யப்பட்டன. இது பற்றி செயல் அலுவலர் கூறும்போது,‘ அன்னூர்
பேரூராட்சி வாரச்சந்தையில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது
கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக ரூ.1 லட்சம் மதிப்புள்ள
பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள்
பயன்படுத்தினால் முதல் முறை ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது
முறை ரூ. 2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்படும். 3 முறை பயன்படுத்தினால்
கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் ’ என்றார்.