தினமலர் 02.12.2013
அம்மா உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
திருவொற்றியூர்:’தினமலர்’ செய்தி எதிரொலியாக, திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள மலிவுவிலை உணவகங்களை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவொற்றியூர் மண்டலம், 14 வார்டுகளிலும் உள்ள மலிவு விலை உணவகங்களில், இருந்த ஆர்.ஓ., கருவிகள் பழுதடைந்தன.
இதனால், உணவகங்களில் சுத்திகரிக்கப்படாத, தண்ணீரை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி வருவாய் துறை மற்றும் நிதித் துறை துணை ஆணையர், வினய் ஐ.ஏ.எஸ்., திருவொற்றியூர், மண்டல உதவி கமிஷனர், காங்கேயன் கென்னடி, செயற்பொறியாளர்கள் காளிமுத்து, உமாபதி, உதவி செயற்பொறியாளர் மோகன் ஆகியோர், ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உணவகங்களில், பழுதான ஆர்.ஓ., கருவியை, புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.