அம்மா உணவகங்கள் தயார்
முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், மதுரை மாநகராட்சி பகுதியில் ஆரப்பாளையம், ஆனையூர், கே. புதூர் ராமவர்மா நகர், காந்திபுரம், ராமராயர் மண்டபம், புது ராமநாதபுரம் சாலை, சிஎம்ஆர் சாலை, மேலவாசல், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் ஆகிய 10 இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் அம்மா உணவகங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த உணவகங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்த உணவகங்களில் வியாழக்கிழமை மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் சமையல் முன்னோட்டம் நடைபெற்றது.
மேயர் விவி ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர். நந்தகோபால், நகர்நல அலுவலர் யசோதாமணி ஆகியோர் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் ரகோபெயாம், மாமன்ற உறுப்பினர்கள் சரவணன், அனுராதா தினேஷ், சண்முகவள்ளி, மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.