தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
அம்மா உணவகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பு
அம்மா உணவகத்தில் பாதுகாவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை, ஆலந்தூர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் செயல்படும் அம்மா
உணவகத்திற்கு பாதுகாவலர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 78
முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.9 ஆயிரத்து 958 வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள், தங்களுடைய முன்னாள் படைவீரர் அடையாள அட்டை,
படைவிலகல் சான்று, பென்சன் பெறுவதற்கான ஆணை, ரேஷன் அட்டை, இரண்டு
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றோடு திங்கள்கிழமைதோறும் காலை 10
மணியளவில் பொது மேலாளர், டெக்ஸ்கோ, எண்.2, மேற்கு மாடவீதி, சின்னமலை,
சைதாபேட்டை, சென்னை-600 015. என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம்,
திருவள்ளுர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.