தினமணி 24.05.2013
அம்மா உணவகம் கட்டுமானப் பணி: அமைச்சர் ஆய்வு
அம்மா உணவகம் கட்டுமானப் பணி: அமைச்சர் ஆய்வு
திருப்பூரில் அம்மா உணவகம் அமைப்பதற்காக புதிதாகக் கட்டப்படும் கட்டடப் பணியை அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம், டவுன்ஹால் குமரன் வணிக வளாகம் உள்பட 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணியை அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, பணியை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான் உள்ளிட்ட உள்ளிட்டோர் உடனிருந்தனர்.