அம்மா உணவகம், பள்ளியில் மேயர் ஆய்வு
மதுரை, : மதுரை மாநகராட்சி அம்மா உண வகம், அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மான கிரி கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆணை யாளர் நந்தகோபால் தலை மையில் மேயர் ராஜன் செல்லப்பா நேற்று ஆய்வு செய்தார்.
கீழ ஆவணி மூலவீதி யில் உள்ள அவ்வை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண் டும், நாற்காலி, டேபிள்களை தூசு இல்லாமல் துடைக்க தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும், பள்ளி க்கு தேவைப்படும் பொருட் கள் குறித்து மாநகராட்சி கல்வி அலுவலரிடம் தெரி விக்க வேண்டும் என உதவித்தலைமை ஆசிரியரிடம் கூறினார்.
பின்னர் மேலவாசலில் உள்ள அம்மா உணவகத் தில் ஆய்வு செய்தார். தயிர், சாம்பார் சாதத்தை சாப் பிட்டு பார்த்தார். சாம்பார் சாதத்தில் காய்கறிகள் கூடுதலாக சேர்க்குமாறும், அரிசி மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவியபின் சமைக்குமாறும் கூறினார். உண வின் தரம் குறித்து பொதுமக் களிடமும் கேட்டறிந்தார்.
ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மெயின் ரோடு இந்திராநகர் மற்றும் பால்பண்ணை எதிரில் உள்ள மானகிரி கால்வாயில் கான்கிரீட் தடுப்பு அமைக் கும் பணியை பார்வையிட்டு, விரைவில் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது ஆணை யாளர் நந்தகோபால், நகர்நல அலுவலர் யசோதாமணி, செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், திருஞானம், அரசு, கவுன்சிலர்கள் பூமிபாலன், பாண்டியம்மாள், பொறியாளர் சே வியர், உதவி தலைமை ஆசி ரியை கல்யாணி உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.