தினமலர் 12.10.2010
அயப்பாக்கம் – திருவேற்காடு சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
அயப்பாக்கம்: அயப்பாக்கம் – திருவேற்காடு சாலையில், ஆக்கிரமிப்பு செய்து கட்டி இருந்த வீடுகள் நேற்று அகற்றப்பட்டன. அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் – திருவேற்காடு வரை 7 கிலோ மீட்டர் தூரம், சாலை அகலப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகளை அகற்ற, கடந்த ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் அனுப்பினர். கடந்த மாதமும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த வீட்டு உரிமையாளர்களுக்கு மேலும் ஒரு நோட்டீஸ் மூலம், ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறினர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் வீடுகளை இடித்துத் தள்ளினர். இதையடுத்து, ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப் பட்டனர்.