தினமலர் 01.03.2010
அய்யலூர் பேரூராட்சி கூட்டம்
வடமதுரை:அய்யலூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் சந்தானலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மத்தியாஸ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அய்யலூர் பேரூராட்சி குப்பாம்பட்டி, கொண் ணையம்பட்டி, கெங்கையூர், கஸ்பா அய்யலூர், களர்பட்டி, முத்துநாயக் கன்பட்டி, சந்தைப் பேட்டை ஆகிய ஆறு வார்டுகளைச் சேர்ந்த 1500 ரேஷன் கார்டுகளுக் கென்று அபிராமி நியாய விலைக்கடை உள்ளது. போதிய இட வசதியில்லாத வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் முறைகேடுகளும் நடக்கின்றன.
எனவே இந்த ரேஷன் கடைக்கு சொந்தமான கட்டடம் கட்ட கரூர் எம்.பி., நிதி ஒதுக்க வேண்டும், பராமரிப்பின்றி கிடக்கும் ரயில்வே கேட்முதல், கஸ்பா அய்யலூர், கெங்கையூர் வழியே வைரபிள்ளைபட்டி ரோட் டை செப்பனிட்டு, ஏழு தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.