தினகரன் 31.05.2010
அய்யலூர் பேரூராட்சி கூட்டம்
வடமதுரை: அய்யலூர் பேரூராட்சிக் கவுன்சில் கூட்டம் தலைவர் சந்தானலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மத்தியாஸ், துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். அய்யலூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வந்து வேலை செய்வதால் குடியிருக்க இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களது வாழ்க்கை நிலையறிந்து அரசு புறம்போக்கு நிலத்தை கண்டறிந்து வீட்டுமனைப் பட்டாவும், வீடுகளும் கட்டி தரவேண்டும். விடுபட்ட அனைவரும் இலவச “டிவி‘ வழங்க அரசு முன்வர வேண்டும் என் பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.