தினமணி 12.12.2009
அரக்கோணத்தில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரக்கோணம், டிச 11: அரக்கோணம் நகராட்சிக்கு உள்பட்ட காலிவாரிகண்டிகை மயானத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
அரக்கோணம் நகராட்சி 8-வது வார்டிற்கு உள்பட்ட பகுதி காலிவாரிகண்டிகை. இப் பகுதிக்கான மயானப் பகுதியை சிலர் கடந்த சில தினங்களுக்குப முன் ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்தனர்.
அதில் அரசியல் கட்சிகளின் கொடிகளையும் பறக்கவிட்டனர். இதையடுத்து, அப் பகுதிக்கான நகரóமன்ற உறுப்பினர் யமுனா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நகர மளிகை வியாபாரிகள் சங்கத் துணை தலைவர் கே.எம்.பி ஜனார்த்தனன் உள்பட அப்பகுதியைச் சேர்ந்த பலர், ராணிப்பேட்டை கோட்டாட்சியர், அரக்கோணம் வட்டாட்சியர், அரக்கோணம் நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் தொடர்ந்து கடந்த நாண்கு தினங்களாக புகார் அளித்து வந்துள்ளனர். இந் நிலையில் அப்பகுதியில் ஒருவர் இறந்ததை அடுத்து அச்சடலத்துடன் போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி இளைஞர்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் தயாநிதி, உதவிப் பொறியாளர் நளினி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மற்றும் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீஸôர் சென்று நகராட்சி ஊழியர்கள் மூலம் மயானத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதையடுத்து, சடலம் அமைதியான முறையில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.