தினத்தந்தி 03.08.2013
அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசு மாநகராட்சி ஆணையாளர் மதுமதி வழங்கினார்
மாணவிகளுக்கு தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில்
மாநகராட்சி ஆணையாளர் மதுமதி பரிசு வழங்கினார்.
பரிசு வழங்கும் விழா
தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி
வியாபாரிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும்,
பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு
பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
காரப்பேட்டை நாடார் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.நடராஜன், விக்டோரியா பெண்கள்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயாபால், சட்ட ஆலோசகர் எம்.சொக்கலிங்கம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் எம்.எஸ்.பி.தேன்ராஜ் வரவேற்று
பேசினார். செயலாளர் டி.எஸ்.பி.ஜெயபாலன், பொருளாளர் சி.பொன்பாண்டியன்
ஆகியோர் பேசினர்.
மதுமதி வழங்கினார்
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி
மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி கலந்து கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் முதல்
மதிப்பெண்கள் பெற்ற 110 மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்ற மாணவி
ஜெ.வெண்முகிலுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தேசிய அளவில் துப்பாக்கி
சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், மாநில அளவில் தங்கப்பதக்கமும் பெற்ற
ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி ஏ.பிரீத்திக்கு நினைவு பரிசு
வழங்கப்பட்டது.
விழாவில் சங்க துணைத்தலைவர்கள்
எஸ்.எஸ்.வி.ரங்கநாதன், சீனிவாசன், துணை செயலாளர் அன்பழகன் மற்றும் சங்க
உறுப்பினர்கள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.