தினகரன் 08.06.2010
அரசு, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது
திருப்பூர், ஜூன் 8:தமிழகத்தில் 4 வகை களாக நிலவி வந்த கல்வி முறையை மாற்றி ஒரே கல்வி முறையை அமல்படுத்தியுள் ளது தமிழக அரசு. முதல்கட்டமாக இந்த சமச்சீர் கல்வி முறை 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி அரசு பள்ளிகளில் படித்தாலும், மெட் ரிக் பள்ளிகளில் படித்தாலும் ஒரே மாதிரியான கல்விமுறையே பின்பற்றப்படும். இந்த கல்வி முறை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்தாண்டை விட கூடுதலான அளவு மாணவர்கள் சேர்க்கைக்காக கூடியுள்ளனர். நேற்று மட்டும் 6ம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்க 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கூடியது குறிப்பிடத்தக்கது.
அதே கல்வி, அதிக கட்டணம் தேவையில்லை, சீருடை, புத்தகம் என பலவற்றுக்கு தனித்தனி கட்டணம் தேவையில்லை என்பதால் நடுத்தர வர்க்கத்தினரின் பார்வை தற்போது அரசு பள்ளிகளின் மீது குவிந்துள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தனியார் பள்ளிகளில் கல்வி முறை சிறப்பாக உள்ளது என்பதால் எங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தோம். தற்போது அரசு பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே கல்விமுறை என்பதால் எங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக் கிறோம்.
அண்மையில் நடந்த தேர்வுகளில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது,” என்கின்றனர் பெற்றோர்கள்.