தினகரன் 16.11.2010
அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள கோயில்கள் விவரம் சேகரிப்பு
ஏழாயிரம்பண்ணை
, நவ. 16: விருதுநகர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள் குறித்த விபரங்களை வருவாய் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.சுப்ரீம் கோர்ட் புறம்போக்கு நிலங்களில் உள்ள கோயில்களை கண்டறிந்து அவற்றை இடிக்க அல்லது முறைப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும்
உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆக்கிரமிப்பு கோயில்கள குறித்து விபரங்கள் சேகரித்து கோர்ட்டுக்கு அறிக¢கை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.இதன்படி தம
¤ழகத்தில் உள்ள ஆக¢கிரமிப்பு கோயில் கள் குறித்த விபரங்களை வருவாய் துறையினர் சேக ரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 3800 கோயில்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதில் சிவகாசி தாலுகா பகுதியில் மட்டும் 600 கோயில்கள் உள்ளன. நீர்நிலை புறம்போக்கு, ஓடை புறம்போக்கு, பொது இடங்கள் அல்லது சாலையை ஆக்கிரமித்து இந்த கோயில்கள் கட்டப்பட்டுள்ளதா என வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள் வ¤பரம் சேகரித்து வருகின்றனர்.இந்த விபரங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக
¢கு அனுப்ப வைக்கப்படவுள்ளது. கிராம பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கோயில்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டும், நகராட்சி பகுதி கோயில்களை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அகற்ற நடவடிக¢கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள கோயில்களை முறைப்படுத்த பட்டா வழங்க வேண்டும்
. அரசு சிறப்பு அனுமதி வழங்கினால் மட்டுமே புறம்போக்கில் உள்ள கோயில்களுக¢கு வருவாய் துறையினர் பட்டா வழங்க முடியும். எனவே ஆக்கிரமிப்பு அகற்றும்போது பிரச்னை ஏற்படும் கோயில்கள் குறித்த விபரங்களையும் வருவாய் துறையினர் சேகரித்து வருகின்றனர். இந்த தகவல்கள் அரசுக¢கு தெரிவிக்கப்பட்டு பிரச்னைக்குரிய கோயில்களுக்கு அரசின் அனுமதி பெற்று பட்டா வழங்கவும் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக¢கை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்
, “புறம்போக்கு நிலங்களில் உள்ள கோயில்களை அகற்ற அல்லது பட்டா வழங்கி முறைப்படுத்த அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆக¢கிரமிப்பு கோயில்கள் குறித்த விபரங்கள் சேகரிக¢கும் பணி தற்போது நடைபெறுகிறது. இதில் பிரச்னைக்குரிய கோயில்களுக்கு பட்டா வழங்கவும், மற்ற ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றவும் அரசுக¢கு பரிந்துரை செய்யப்படவுள்ளது என்றார்.