தினமலர் 08.12.2010
அரியலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம்
அரியலூர்: அரியலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவி விஜயலெக்ஷ்மி செல்வராஜ் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர்(பொ) மோகன், துணைத் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கிளர்க் குமரன் வரவேற்றார்.அரியலூர் நகராட்சி பகுதியில் ஆளிறங்கு கிணறுகள் மற்றும் தனியார் மனித கழிவு தொட்டிகளில், பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணி மேற்கொள்ளும் போது, திடீர் மரணம் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது என்பதை வலியுறுத்தி, அரசிடம் வந்த கடிதம் பார்வைக்கு வைக்கப்பட்டது. கவுன்சிலர் குணா பேசுகையில், “”நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் மண்டியுள்ள கருவையை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.