மாலை மலர் 10.11.2009
அருப்புக்கோட்டையில் அனைத்து வார்டுகளுக்கும் தாமிரபரணி குடிநீர் சப்ளை: நகரசபை தலைவர் அறிவிப்பு
அருப்புக்கோட்டை, நவ. 10-
அருப்புக்கோட்டையில் இனி மேல் அனைத்து வார்டு களுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும் என நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம் அறிவித்து உள்ளார். அவர் கூறியதா வது:-
அருப்புக்கோட்டைக்கு வல்லநாடு பகுதியில் இருந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அங்கு இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 36 வார்டுகளில் முதலில் 12 வார்டுகளுக்கு தாமிரபரணி குடிநீரும், மீதி உள்ள 24 வார்டுகளுக்கு தாமிபரணி மற்றும் வைகை குடிநீரும் கலந்து கொடுப்பதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வர கிறது.
தாமிரபரணி அல்லது வைகை குடிநீர் கொடுத் தால் போதும் இரண்டை யும் கலந்து வழங்க வேண்டாம் என பொதுமக் கள் நகராட்சியில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உத்தரவுப்படி அனைத்து வார்டுகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது
இந்த முடிவின்படி நகராட்சி வளாகத்தில் இருந்து தாமிரபரணி பம்பில் இருந்து பம்பிங் குழாய்களை மதுரை ரோட்டில் உள்ள 2 மேல்நிலை தொட்டிகள் வரை பதித்தால் தாமிர பரணி குடிநீர் அனைத்து வார்டுகளுக்கும் கொடுக்க முடியும். அதன்படி சுமார் ரூ.30 லட்சம் செலவில் மேல்நிலை தொட்டிகளை இணைக்கும் குழாய்கள் பதிக்கும் பணி 4 மாதங்கள் நடைபெற்று முடிந்து உள்ளது.
தற்சமயம் இதில் சோதனை ஓட்டம் நடை பெற்று வருகிறது. இது முடிவுற்றவுடன் முறைப்படி அனைத்து வார்டுகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்கப் படும். இதில் ஒரு நாள் ஒரு பகுதிக்கு வைகை குடிநீரும், மற்றொரு பகுதிக்கு தாமிரபரணி குடிநீரும் வழங்கப்படும். இனிமேல் அனைத்து வார்டுகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங் கப்படும்.இவ்வாறு அவர் கூறி னார்.