தினமலர் 24.12.2009
அவஸ்தை : பாதாள சாக்கடை பணி முடிய மூன்று மாதமாகும் : திண்டுக்கல் நகராட்சி கமிஷனர் லட்சுமி உறுதி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி 2010 மார்ச்சுக்குள் முடியும். அதன் பின்னரே அத் தனை ரோடுகளும் சீரமைக்கப்படும் என நகராட்சி கமிஷனர் லட்சுமி உறுதியளித்துள்ளார். திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி தொடங்கியதில் இருந்தே ரோடுகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு, தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள் ளது. நகரில் போக்குவரத்து என்பது சிரமமான விஷயமாக மாறி விட்டது.பஜார் பகுதியில் வியாபாரத்தில் பெரிய அளவில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சி கமிஷனர் லட்சுமி கூறியதாவது: திண்டுக்கல் லில் பாதாள சாக்கடை பணி 23.76 கோடி ரூபாய் செலவில் 22 வார்டுகளில் நடந்து வருகிறது. 10 வார்டுகளுக்கான பணிகள் 2007ம் ஆண்டு அக்., 4ம்தேதி “விஸ்வா இன்ப்ரா ஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்‘ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
12 வார்டுகளில் “கிர்லோஸ்கர் கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட்’ என்ற நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. கடந்த 2008 மார்ச்சில் இருந்து பணிகள் தொடங்கின. மழை, நிலத்தடியில் உள்ள பாறைகள், நிலத்தடி நீர், திருவிழாக்கள் போன்ற காரணங்களால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. மின் தடை காரணமாக பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது.
வேறு மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் பாதாள சாக்கடை பணிக்கு வந்த பணியாளர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டது. இத்தனை தடைகளுக்கும் இடை யே 80 சதவீத பணிகள் முடிந்துள் ளன. 2010 மார்ச்சில் இப்பணிகள் அனைத்தும் முடிந்து விடும்.
ஒவ்வொரு தெருக்களிலும் பணி தொடங்கும் முன்னர் அறிவிப்பு செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. பணிகளின் தரம் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர்,கலெக்டர், உலக வங்கிக்குழு, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இத்திட்டப் பணிகளை விரைவுபடுத்த கூடுதல் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
குழாய்கள் பதிக்க தோண்டப் பட்ட பள்ளங்களை பணிகள் முடிந்த உடனே மூட உத்தரவிடப் பட்டுள்ளது.மேடு பள்ளமான ரோடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்த உடன் அத்தனை ரோடுகளும் சீரமைக்கப்படும். எனவே பணிகளை முடிக்க ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.