தினகரன் 05.10.2010 ஆக்கிரமித்து ஜல்லி உடைப்பு வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடை கட்டப்படுமா
தண்டையார்பேட்டை
, அக். 5: வைத்தியநாதன் பாலத்தை ஆக்கிரமித்து ஜல்லி உடைக்கும் தொழில் நடக்கிறது. இதை அகற்றி அப்பகுதியில் மாநகராட்சி கடைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் ரயில்வே மேம்பாலம் உள்ளது
. இதற்கு வைத்தியநாதன் மேம்பாலம் என்று பெயர்.இதன் ஒருபுறத்தில் இளையமுதலி தெருவில் இருந்து தண்டையார்பேட்டை ரயில் நிலையம் செல்லும் பாதையில் மேம்பாலத்தின்கீழ் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தனியார் ஆக்கிரமிப்பால் பாழடைந்து வருகிறது
.ஒருபுறம் மேம்பாலத்தில் மாட்டு சாணத்தை தட்டி காய வைக்கின்றனர்
. மறுபுறத்தில், செங்கல் ஜல்லி உடைக்கும் தொழிலகமாக மாறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒவ்வொரு மழையின் போதும் இங்கு தண்ணீர் தேங்கி மோசமாகிறது
. தண்டையார்பேட்டை ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.சென்னை நகரின் பல இடங்களில் பாலத்தின் கீழ் உள்ள இடங்கள் கடைகள் கட்டப்பட்டு
, வருவாய் தரும் இடங்களாக மாறியுள்ளன.அதேபோல வைத்தியநாதன் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி
, கடைகள் அல்லது குடோன்கள் கட்டி விட்டால் வருவாய்க்கு வருவாயும் கிடைக்கும், அந்த பகுதியும் சுத்தமாக இருக்கும் என ரயில் பயணிகள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.