தினமலர் 26.07.2010
ஆக்கிரமிப்பில் இருந்த ரிசர்வ் சைட் மீட்பு
கோவை : செல்வபுரம் சண்முகராஜபுரத்தில் உள்ள ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள “ரிசர்வ் சைட்‘டை கோவை மாநகராட்சி மீட்டது.கோவை மாநகராட்சி 56 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் சண்முகராஜபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைப்பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு, முறையான அங்கீகாரத்துடன் மனைகள் விற்கப்பட்டன. இந்த மனைப்பிரிவுக்கான பொது ஒதுக்கீட்டு இடமாக (ரிசர்வ் சைட்) 20 சென்ட் ஒதுக்கப்பட்டது. அங்கு எந்த மேம்பாட்டுப் பணியும் செய்யப்படாததால் காலியிடமாகக் கிடந்தது.
இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர்
, அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றனர். சில ஓட்டு வீடுகளைக் கட்டி, பிறருக்கு வாடகைக்கு கொடுத்தனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து, அப்பகுதியிலுள்ள மக்கள் சார்பில், கோவை மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நடவடிக்கை எடுக்குமாறு நகரமைப்புப் பிரிவுக்கு மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சென்ற குழுவினர்
, அந்த பகுதி முழுவதையும் நில அளவை செய்து, பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அங்கு காலியாக இருந்த இடங்களில் இருந்த முட்புதர்களை அகற்றினர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில், மக்கள் குடியிருந்ததால் ஒரு நாள் கால அவகாசம் வழங்கினர்.நாளை
( இன்று) மீண்டும் கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, நிலம் சமப்படுத்தப் பட்டு, அவை பூங்காவாகவும், விளையாட்டு திடலாகவும் மாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. “”கோவை மாநகராட்சி உதவி நகரமைப்புஅலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில்,””தற்போது மாநகராட்சி வசம் வந்துள்ள இந்த இடத்தின் இன்றைய மார்க்கெட் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் இருக்கும்,” என்றார்.