தினமலர் 04.05.2010
ஆக்கிரமிப்பு அகற்றம்
திருச்சி: திருச்சி மாநகராட்சி தென்னூர் பகுதியில், மழைநீர் வடிகாலில் இருந்த ஆக்ரமிப்பு கட்டிடம், கடைகள் அகற்றப்பட்டன. திருச்சி மாநகராட்சி கோ–அபிஷேகபுரம் கோட்டம், தென்னூர் ராமராய அக்ராஹாரம் பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மழைநீர் வடிகாலில் கட்டப்பட்ட ஆக்ரமிப்பு கட்டிடம், இரண்டு கடை, ஒரு வீடு, நான்கு மதில்சு வர் அகற்றப்பட்டன.ஆக்ரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் நாகேஷ், இளநிலைப் பொறியாளர் ஜெகஜீவன்ராம் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.ஏ.சி., ஞானசேகரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.