தினமணி 23.07.2010
ஆக்கிரமிப்பு அகற்ற அறிவிப்பு
கோபி, ஜூலை 22: கோபி நகர் மற்றும் ஈரோடு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் முக்கிய ரோடுகள் அகலப்படுத்தும் பணி. சிறுபாலங்கள் மற்றும் சாலை சீரமைத்தல் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் துவங்கும் முன்பு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள சம்பந்தப்படவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது உதகை–கோத்தகிரி சாலை, மேட்டுப்பாளையம்–சத்தி சாலை, கோபி–ஈரோடு சாலை, கோபி–ஊத்துக்குளி படியூர் சாலை, கோபி மொடச்சூர் மற்றும் நகரப் பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள செவ்வாய்க்கிழமை தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
கோபி பஸ் நிலையம், மொடச்சூர் மற்றும் ஈரோடு–சத்தி ரோடுகளில் பல இடங்களில் தண்டோரா மூலம் நகராட்சி ஊழியர் அறிவிப்பு செய்தார்.