தினமலர் 04.03.2013
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்
சென்னை: கேசவப்பிள்ளை பூங்கா குடிசை மாற்று குடியிருப்பில், விதிமீறி கட்டப்பட்ட, கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன.பட்டாளம், கேசவப்பிள்ளை பூங்காவில், மூன்று பிரிவுகளில், 3,500 குடியிருப்புகள் உள்ளன. இதில், தரைதளத்தில் குடியிருப்போர், தெருக்களையும், பூங்காவையும் ஆக்கிரமித்து கடைகள், குடிசை வீடுகளை கட்டியுள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், நேற்று, “பொக்லைன்’ இயந்திரம் மூலம், 100 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை, பேசின் பாலம் போலீசார் உதவியுடன் இடித்து அகற்றினர்.