தினமணி 05.09.2013
தினமணி 05.09.2013
ஆக்கிரமிப்பு பகுதிகளில் மேயர் ஆய்வு
வேலூர் மாநகராட்சி 14-வது வார்டில் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து அப்பகுதியில் மேயர்
பா.கார்த்தியாயினி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ராதாகிருஷ்ணா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து
வீடுகள் கட்டியதால் இப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வேறு பாதையில் செல்ல வேண்டிய கட்டாய நிலை
ஏற்பட்டுள்ளதாகவும், ஓம்சக்தி நகர் பகுதியில் கால்வாய் தூர்வாராமல்
இருப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குறை
கூறினர்.
பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுவதாக
மேயர் உறுதி அளித்தார். ஆணையர் ஜானகி ரவீந்திரன், பொறியாளர் பாஸ்கரன்
ஆகியோர் உடன் சென்றனர்.