ஆட்டிறைச்சி வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை
மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் யசோதாமணி தலைமையில், அலுவலர்கள் ஆட்டிறைச்சி கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அண்ணா நகர், கே.கே. நகர், தெப்பக்குளம் பகுதிகளிலுள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில், அவரவர் கடைகளிலேயே ஆடுகளை வெட்டி இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. அந்தக் கடைகளில் இருந்து 70 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இது குறித்து நகர்நல அலுவலர் யசோதாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆட்டிறைச்சி வியாபாரிகள் மாநகராட்சிக்கு சொந்தமான ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டும் ஆடுகளை வெட்டி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆட்டிறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், மேல் நடவடிக்கைககள் எடுக்கப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.