தினகரன் 16.11.2010
ஆதித்யா பிர்லா மருத்துவமனையில் பிசிஎம்பி மாநகராட்சியின் முதல் கண் வங்கி
பிம்ப்ரி சிஞ்ச்வாட், நவ. 16: பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சி தனது முதல் கண் வங்கியை தொடங்கியுள்ளது. ஆதித்யா பிர்லா நினைவு மருத்துவமனையின் 4வது ஆண்டு நிறைவு விழாவின் போது ‘பிசிஎம்சி ஆதித்யா ஜோத்’ என புதிய கண் வங்கி தொடங்கப்பட்டது.
பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சி மற்றும் ஆதித்யா பிர்லா மருத்துவமனை இணைந்து தொடங்கியுள்ள இந்த கண் வங்கிக்கு டாக்டர் ரித்தேஷ் காக்ரானியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கியின் தொடக்க விழாவில், ஆதித்யா பிர்லா பவுண்டேசன் தலைவர் ராஜஸ்ரீ பிர்லா, மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.பி. சிங் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ராஜஸ்ரீ, பார்வையற்றவர்களுக்கு ஒளி கொடுக்க கண் தானம் மற்றும் கண் வங்கியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இந்த வங்கியில் பொதுமக்கள் தங்களது கண்களை தானம் செய்ய பதிவு செய்து கொள்ளலாம்.