தினமணி 13.08.2013
தினமணி 13.08.2013
ஆபத்தான மரங்களை அகற்ற சென்னை மாநகராட்சியை அணுகலாம்
சென்னையில் விழும் நிலையில் உள்ள மரங்கள் குறித்து
தகவல் தெரிவித்தால் உடனடியாக அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி
தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்
குறிப்பு: மாநகராட்சி சாலைகளில் உள்ள காய்ந்த மரங்கள், கிளைகள்,
மழைக்காலங்களில் விழும் நிலையில் உள்ள மரங்கள், தெரு விளக்கு வெளிச்சத்தை
மறைக்கும் வகையில் உள்ள மரங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்
வகையில் உள்ள மரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற மரங்கள் குறித்து 1913 என்ற புகார் பிரிவு எண்ணில் 24 மணி
நேரமும் தகவல் தெரிவிக்கலாம். மண்டல அலுவலகங்களிலும் புகார் அளிக்கலாம்.
மேலும் மேயர் அலுவலக எண்ணிலும் (044 2561 9300) ஆணையர் அலுவலக எண்ணிலும்
(044 2561 9200) தொடர்பு கொள்ளலாம்.
மண்டலம் – மண்டல அலுவலகம்
திருவொற்றியூர் – 25993494 9445190201
மணலி – 25941079 9445190202
மாதவரம் – 25530427 9445190203
தண்டையார்பேட்டை – 25951083 9445190204
ராயபுரம் – 25206655 9445190205
திரு.வி.க. நகர் – 26749990 9445190206
அம்பத்தூர் – 26253331 9445190207
அண்ணாநகர் – 26412646 9445190208
தேனாம்பேட்டை – 28170738 9445190209
கோடம்பாக்கம் – 24838968 9445190210
வளசரவாக்கம் – 24867725 9445190211
ஆலந்தூர் – 22342355 9445190212
அடையாறு – 24425961 9445190213
பெருங்குடி – 22420600 9445190214
சோழிங்கநல்லூர் – 24500923 9445190215