தினமணி 15.06.2013
தினமணி 15.06.2013
ஆம்பூர் நகராட்சி துவக்கப் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்புகள் துவக்கம்
ஆம்பூர் அழகாபுரி மற்றும் கஸ்பா – ஏ நகராட்சி
துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடக்க விழா மற்றும் நகராட்சி
சார்பில் பாய்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அழகாபுரி நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவுக்கு நகரமன்றத்
தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தலைமை வகித்து ஆங்கில வழிக்கல்வி
வகுப்புகளைத் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க
பாய்களை வழங்கினார்.
ஆம்பூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல்.குமார், மாதனூர் உதவி தொடக்கக்
கல்வி அலுவலர் டி.நடராஜன், பள்ளித் தலைமை ஆசிரியை வி.விஜயலட்சுமி, ஆசிரியர்
பயிற்றுநர்கள் வி.செல்வராணி, பி.எம்.ரஸியா பேகம், பள்ளி மேலாண்மைக் குழுத்
தலைவர் பி.ஜீவரத்னம், நகராட்சி இளநிலை உதவியாளர் பிரேம் ஆனந்தன், ஜேசீஸ்
சங்கத்தைச் சேர்ந்த ஆர்.சரவணன், கனகம்மாள் அறக்கட்டளை நிர்வாகி ஈ.ரமேஷ்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் நகரில் உள்ள 11 நகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பாய்கள் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.