தினமலர் 30.03.2010
ஆரணியில் வரி பாக்கி உள்ள கடைகளுக்கு ‘சீல்‘
திருவண்ணாமலை: ஆரணியில் வரி பாக்கி உள்ள கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி பகுதியில் சொத்துவரி, குத்தகை, வாடகை வரி, குத்தகை, வாடகை இனபாக்கி, குடிநீர் வரி பாக்கி, தொழில்வரி நிலுவை பாக்கி 6 கோடியே 10 லட்ச ரூபாய் உள்ளது. மார்ச் 31ம் தேதிக்குள்ளாக அனைத்து வரி இன பாக்கிகளையும் வசூல் செய்ய முகாமிட்டு வருவதாக கமிஷனர் சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, ”கடந்த ஒரு வாரத்தில் 15 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 15 கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது. வரும்31ந் தேதிக்குள் வரி பாக்கியை முழுமையாக வசூலிக்கப்பட உள்ளது. தவறும் பட்சத்தில் குடிநீர் வரி பாக்கி உள்ளவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.