தினமணி 18.02.2010
ஆரணி பேரூராட்சி மன்றக் கூட்டம்
கும்மிடிப்பூண்டி, பிப். 17: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ÷பேரூராட்சி தலைவர் ஹேமபூஷணம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாபு, செயல் அலுவலர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
÷இக் கூட்டத்தில் பேரூராட்சியின் வரவு செலவு கணக்கு, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் குறித்த விவரங்கள் மன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். பேரூராட்சி பகுதியில் தடையில்லா குடிநீர், போதிய தெரு விளக்குகள் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.