தினமணி 08.02.2010
ஆறுமுகனேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
ஆறுமுகனேரி, பிப். 7: ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட 20 முகாம்களில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு னாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திசைகாவல் தெருவில் உள்ள ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இம் முகாமை ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் தலைவர் சா. பொன்ராஜ் தொடக்கிவைத்தார்.
பேரூராட்சி உறுப்பினர்கள் மகாராஜன், ரா. செல்வி, சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஜெயபரணி, அம்முக்குட்டி, பாலமுருகன், சுகாதார ஆய்வாளர்கள் ஏ. முத்துக்குமார், லின்ஸ், தங்கராணி, பொம்மையா, சுகாதார செவிலியர் புஷ்பலீலாபாய் கலந்துகொண்டனர். செல்வராஜபுரம் துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை திமுக நகரச் செயலர் கா.மு. சுரேஷ் தொடக்கிவைத்தார்.