தினமணி 15.02.2014
ஆலந்தூர், நங்கநல்லூரில் குடிநீர் விநியோகம் ரத்து
தினமணி 15.02.2014
ஆலந்தூர், நங்கநல்லூரில் குடிநீர் விநியோகம் ரத்து
ஆலந்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட
இடங்களில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து
செய்யப்பட உள்ளது.
இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி:
மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஜி.எஸ்.டி. சாலையில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன.
இதற்கான பணிகள் வரும் திங்கள்கிழமை காலை 8 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணிவரை நடைபெறவுள்ளன.
இதனால் ஆலந்தூர், ஆதம்பாக்கம், பாலாஜி நகர், பக்தவச்சலம் நகர்,
நங்கநல்லூர், கண்டோன்மென்ட் பகுதி, மீனம்பாக்கம், பம்மல், முனைவர் அவின்யூ,
கண்ணபிரான் கோயில் தெரு, அனகாபுத்தூர், பொழிச்சலுர், கவுல்பஜார் உள்ளிட்ட
பகுதிகளில் அன்றைய தினங்களில் குடிநீர் விநியோகம் தடைப்படும். லாரி
குடிநீர் தேவைப்படுபவர்கள் 81449 30912, 81449 30365, 81449 30315, 044 –
28454040 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.