தினமணி 31.05.2010
ஆலோசனைக் கூட்டம்
முசிறி, மே 30 : திருச்சி மாவட்டம், முசிறி நகர சுகாதார மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தில்லி – கென் இந்தியா அமைப்பு உறுப்பினர் சுவஹதா சென்பிள்ளை தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் வீ.சி. சுதாகர், செயல் அலுவலர் த. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு நகர்புற சுகாதார கொள்கை திட்டத்தின்படி பணிகள் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.