தினமணி 02.07.2013
தினமணி 02.07.2013
ஆவடி நகராட்சியில் சிறப்பு சுகாதாரப் பணி தொடக்கம்
ஆவடி நகராட்சியில், சிறப்பு சுகாதாரப் பணிகளை அமைச்சர்கள் வி.மூர்த்தி, எஸ்.அப்துல் ரஹீம் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி
மற்றும் மாதவரம் ஆகிய 5 நகராட்சிகளிலும் தீவிர சிறப்பு சுகாதார பணிகளை
மேற்கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, கடந்த
15-ஆம் தேதி திருவள்ளூரில் சுகாதார பணிகளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து,
திருத்தணியிலும் சிறப்பு சுகாதார பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், ஆவடி நகராட்சியில் தீவிர சிறப்பு சுகாதாரப் பணிகள் தொடக்க
விழா ஆட்சியர் கோ.வீரராகவராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நகர
கமிஷனர் மோகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல்
ரஹீம் கலந்து கொண்டு சுகாதார பணிகளை, ஆவடி ரயில் நிலையம் அருகில் தொடங்கி
வைத்தனர். மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்
விநியோகிக்கப்பட்டன.
நகரப் பொறியாளர் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி
உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சுகாதார
பணியில் 50 சிறப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.