தினகரன் 05.04.2017
ஆவாரம்பாளையம் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: மாநகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு

கோவை: கோவை ஆவாரம்பாளையம் சாலையில் சேதமடைந்த
குடிநீர் குழாய் நேற்று மாநகராட்சி ஊழியர்களால் சீரமைக்கப்பட்டது. கோவை
பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் இருந்து ஆவாரம்பாளையம் பகுதிக்கு
வழித்தடம் செல்கிறது. இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று
வருகின்றன. இந்த சாலையில் பில்லூர் குடிநீர் விநியோகத்திற்காக தரையில்
சுமார் 6 அடி ஆழத்தில் சிறிய விட்டமுள்ள குடிநீர் பகிர்மான குழாய்கள்
பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் புரானிகாலனி பிரிவு அருகே உள்ள தனியார்
பள்ளியின் முன்புறம் உள்ள சாலையின் தரைப்பகுதியில் பதிக்கப்பட்டு இருந்த
பில்லூர் குடிநீர் பகிர்மானக்குழாய் நேற்று முன்தினம் இரவு உடைந்தது.
இதனால் அந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் போது உடைந்த
பகிர்மானக்குழாய் வழியாக தண்ணீர் வழிந்தோடியது. இதனால் அந்த இடமே சேறும்,
சகதியுமானது. குழாய் உடைப்பு ஏற்பட்ட அந்த பகுதியில் வாகன போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர்
பிரிவு பொறியாளர்கள் நேற்று சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பு செய்யும்
பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை இந்த பணி நடந்தது. நேற்று இரவு பணிகள்
முடிக்கப்பட்ட பின்னரே அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.