தினமலர் 02.03.2010
ஆஸ்பத்திரியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அமைச்சர் உத்தரவு
மணல்மேடு : மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தவிட்டார்.
மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேர அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கென விரிவாக்கம் செய்து கட்டடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றி திரிந்த நாய்களை கண்டு அதிர்ச்சியடைந்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மணல்மேடு–கிழாய் வழி வில்லியநல்லூர் சாலையை தரமான சாலையாக சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் தெரிவித்தார்.வல்லம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை கோரி அமைச்சரிடம் மனு அளித்தனர். அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.