தினமணி 17.02.2014
இன்றுமுதல் சிறப்பு தாய்-சேய் மருத்துவ முகாம்கள்
தினமணி 17.02.2014
இன்றுமுதல் சிறப்பு தாய்-சேய் மருத்துவ முகாம்கள்
முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, கோவை
மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் திங்கள்கிழமைமுதல் வியாழக்கிழமை வரை 9
மாநகராட்சி மருத்துவமனைகளில் சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள்
நடைபெறும என மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திங்கள்கிழமை (பிப். 17)
சிங்காநல்லூர் நகர் நல மையம், ராமநாதபுரம் நகர் நல மையம், செல்வபுரம் நகர்
நல மையத்திலும் செவ்வாய்க்கிழமை (பிப். 18) கணபதி நகர் நல மையம்,
சி.டி.எம். நகர் நல மையம், எஸ்.எல்.எம். நகர் நல மையத்திலும்,
வியாழக்கிழமை (பிப். 20) எம்.எம். நகர் நல மையம், ஆர்.கே.பாய் நகர் நல
மையம், வி.வி.எம். நகர் நல மையத்திலும் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை
முகாம் நடைபெறும். கர்ப்பிணிகள் மற்றும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்காக
இம் முகாம்கள் நடைபெறுகின்றன.
இம்முகாம்களில் மாநகர மக்கள் தங்களுக்குத் தேவையான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைப் பெற்று பயனடையலாம்.