தினமணி 26.06.2013
தினமணி 26.06.2013
இன்றும், நாளையும் தெற்கு, மத்திய தில்லியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
தெற்கு மற்றும் மத்திய தில்லியில் பல்வேறு
பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் புதன் (ஜூன்
26), வியாழன் (ஜூன் 27) இரு தினங்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என்று
தில்லி ஜல் போர்டு தெரிவித்துள்ளது.
தெற்கு தில்லியில் ஆர்.கே. புரம், வசந்த் விஹார், கத்வாரியா சராய், பெர்
சராய், கிஷன் கார்ஹ், சஃப்தர்ஜங் மேம்பாட்டுப் பகுதிகள், முனிர்கா,
மெஹ்ரெüலி, கிரீன் பார்க், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், சஃப்தர்ஜங்
என்கிளேவ், ஜனக்புரி, சாகர்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்;
மத்திய தில்லிக்கு உள்பட்ட தில்லி கன்டோன்மென்ட், மோதி பாஹ், நனக்புரா,
வசந்த் என்கிளேவ், சாந்தி நிகேதன், ஏஐஐஎம்எஸ், சஃப்தர்ஜங் மருத்துவமனை
மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இரு நாள்களுக்கு குடிநீர்
விநியோகம் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.