இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் பகுதியில் மின்சார வாரிய பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஏப்ரல் 24) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
கடலூர் நகர்மன்ற ஆணையர் ப.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நகர குடிநீர் ஆதார இடங்களான திருவந்திபுரம் மற்றும் கேப்பர்மலை, தலைமை நீரேற்று நிலையங்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 23-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.
மின்தடைக் காரணமாக மேல்நிலை தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்ற இயலவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளையம், செம்மண்டலம், அண்ணா நகர், தேவனாம்பட்டினம் மற்றும் கடலூர் துறைமுகம் ஆகிய நகரப் பகுதிகளில் 24-ம் தேதி காலை குடிநீர் வழங்க இயலாது, மேலும் வரும் 25-ம் தேதி காலை வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.