தினமணி 01.07.2013
தினமணி 01.07.2013
இன்று குடிநீர் குறைத்தீர் முகாம்.
நகர தெற்கு முதலாம் துணைமண்டலத்தில் திங்கள்கிழமை குடிநீர் குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தெற்கு முதலாம் துணைமண்டலத்தில் உள்ள பனசங்கரி, இஸ்ரோ லேஅவுட்,
பத்மநாபநகர், குமாரசாமி லேஅவுட் மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில்
திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீர் குறைத்தீர்ப்பு
முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தண்ணீர் ரசீது,
குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள்
குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம்
தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல் அறிய
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்- 22945143, 22238888.