தினகரன் 31.05.2010
இன்று நகராட்சி கூட்டம்
பொள்ளாச்சி, மே 31: பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் இன்று நடைபெறுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு ஆணையாளர் வரதராஜ், நகரமைப்பு அலுவலர் வரதராஜன், பொறியாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் தெரு விளக்குகளுக்கு உபகரணங்கள் வாங்குவது, குடிநீர் குழாய்கள் அமைத்தல், புதிதாக தார் ரோடுகள் போடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அதேபோல் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்றுதல், குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளில் தொய்வு உள்ளிட்ட நகரில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்விகளை எழுப்ப கவுன்சிலர்களும் முடிவு செய்துள்ளனர்.