தினகரன் 31.12.2009
இன்று மன்ற கூட்டம் பெருநகர மாநகராட்சி அரசாணை இன்று பதிவு

சென்னை, : சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை மன்ற கூடத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். ஆணையர் ராஜேஷ்லக்கானி, துணை மேயர் ஆர்.சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 9 நகராட்சி, 8 பேரூராட்சி, 25 ஊராட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன் சேர்த்து சென்னை பெருநகர மாநகராட்சியாக உருவாக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த அரசு ஆணை, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு மன்ற நடவடிக்கை குறிப்பில் பதிவு செய்யப்படும். இதன் பின்னர் புதிய மாநகராட்சி உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துணை ஆணையர் அந்தஸ்திலுள்ள சிறப்பு அதிகாரியை ஆணையர் நியமிக்க கூடும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.