தின மணி 22.02.2013
இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்
சென்னை மாநகராட்சியின் மன்றக்கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.22) ரிப்பன் கட்டடத்தில் நடைபெறுகிறது.
மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்துக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறும் மன்றக் கூட்டத்தின்போது, நிலுவையில் உள்ள தீர்மானங்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் சாலை வசதி, மழைநீர் வடிகால் பணிகள், கொசு ஒழிப்பு, குப்பை உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.