தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
இன்று முதல் நாய்களுக்கு தடுப்பூசி
மதுரையில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல், இங்கிலாந்து மருத்துவர் தலைமையிலான குழுவினர், நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ரேபிஸ் என்ற வெறிநாய்க்கடி நோயைத் தடுக்க, தெரு
நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட
ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் இங்கிலாந்தில்
இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர் அப்புபிள்ளை முருகன் மற்றும் வெளிநாட்டு
தொணடு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 13ஆம் தேதி முடிய, மதுரை மாநாகராட்சிக்கு
உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு
இலவசமாக தடுப்பூசி போடப்படும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது நாய்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
மாநகராட்சியிலும் இது தொடர்பான கூட்டம், ஆணையர் ஆர். நந்தகோபால்
தலைமையில் நடைபெற்றது. மருத்துவக் குழுவினர் 4 குழுக்களாகப் பிரிந்து
தடுப்பூசிகளை போடுவர் என்றும், தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு
அடையாளமாகக் கழுத்தில் பட்டை அணிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.