தினமலர் 20.04.2010
இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம்
தஞ்சாவூர் : தஞ்சை அண்ணாநகர் நகராட்சி பள்ளியில் இயற்கை நல வாழ்வு பயிற்சி முகாம் நடந்தது.தஞ்சை கூட்டுறவு காலனி இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் நடந்த இப்பயிற்சி முகாமில் எத்திராஜுலு வரவேற்றார். கருணாநிதி தலைமை வகித்தார். உடற்பயிற்சிகள், தியானம், மூச்சுப்பயிற்சி, மூலிகை சாறுகள் அருந்துவது குறித்து கற்றுத் தரப்பட்டன. மயிலாடுதுறை இயற்கை மருத்துவ சங்க தலைவர் பொன்.கோவிந்தராஜலு ரெய்கி முறை சிகிச்சை பற்றி விளக்கினார். அனுபவ மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தி மூலிகை விளக்கமளித்தார். முகாமில் அனைவருக்கும் அடுப்பு, நெருப்பு இல்லாமல் சமைத்த இயற்கை உணவு விருந்து வழங்கப்பட்டது.இதில் சுமார் 160க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை எத்திராஜலு, சீனிவாசன் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளராக சோமசுந்தரம் செயலாற்றினார். ரவி நன்றி கூறினார்..