தினகரன் 31.05.2010
இயற்கை பேரிடர் தடுப்பு மாநகராட்சியில் ஆலோசனை
மதுரை:மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இயற்கைப் பேரிடரால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் நடந்தது.தாழ்வான இடங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற டீசல் மோட்டாரை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க தற்காலிக மையம், மாநகராட்சி பள்ளி, திருமண மகால்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்யவேண்டும்.மரங்கள்முறிந்து விழுந்தால், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். எந்நேரமும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருத்தல், கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் செயல்படுதல், குடிநீரில் குளோரின் அளவை பரிசோதித்தல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டன.
தலைமைப் பொறியாளர் சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் சுப்ரமணியன், நகரமைப்பு அலுவலர் முருகேசன், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் பங்கேற்றனர்.