தினமலர் 04.05.2010
இறைச்சி பறிமுதல் நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்து கமிஷனரிடம் விற்பனையாளர்கள் முறையீடு
திருப்பூர்: சுகாதாரமற்ற முறையில் ஆடு, மாடுகளை வதைத்து இறைச்சி விற்பனை செய்வதாகக்கூறி, மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதி காரிகள் ‘ரெய்டு‘ நடத்தி, பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாட்டிறைச்சி விற்பனையாளர் கள், மாநகராட்சி லாரியை நேற்று சிறைப்பிடித்தனர். இதுகுறித்து கமிஷனரிடமும் முறையிட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதியில் இயங்கும் ஆட்டிறைச்சி விற்பனையாளர் களுக்காக, மாநகராட்சி தரப்பில் ஆடுவதைக்கூடம் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், ‘ஆடு வதைக்கான கட்டணம் 50 ரூபா யாக உள்ளது. இதர மாநகராட்சி களில் அதிகபட்சம் 10 ரூபாய்; திருப்பூரில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் பல மடங்கு அதிகம்‘ எனக்கூறி, ஆட்டிறைச்சி விற்பனை யாளர்கள் ஆடுவதைக்கூடத்தை பயன்படுத்துவதை தவிர்த்தனர்.மாநகராட்சி நிர்வாகம், இதன் எதிர்நடவடிக்கையாக, சுகாதார மற்ற முறையில் இயங்கும் ஆட் டிறைச்சி விற்பனை கடைகளில் திடீர் ரெய்டு நடத்தி, இறைச்சி களை பறிமுதல் செய்து அழித்து வருகிறது. நேற்று காலை நொய்யல் வீதி பகுதியில் மாட்டிறைச்சி விற்பனை கடை களில் திடீர் ‘ரெய்டு‘ நடத்திய சுகாதாரப்பிரிவினர் ஓரிரு கடை களில் இறைச்சியை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி, பயன் படுத்த முடியாதபடி செய்தனர். ‘மாடுவதைக் கூடம் இல்லாத நிலையில், எங்கு கொண்டு சென்று மாடுகளை அறுப்பது; மாநகராட்சி நிர்வாகம் முன்னறி விப்பு, நோட்டீஸ் இல்லாமல் ‘ரெய்டு‘ நடத்தி இறைச்சியை பறி முதல் செய்வது கண்டிக்கத்தக்கது‘ எனக்கூறி, மாட்டிறைச்சி விற்பனை யாளர்கள், பறிமுதல் செய்யப் பட்ட இறைச்சியை அள்ளிச் சென்ற லாரியை சிறைப்பிடித்தனர். இதனால், நொய்யல் வீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார், இறைச்சி விற்பனையாளர்களிடம் பேச்சு நடத்தினர்.
அதேசமயம் பறிமுதல் செய்த இறைச்சியை திரும்ப ஒப்படைக்க வில்லை. கமிஷனரிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டதால், லாரி விடுவிக்கப்பட்டது. 41வது வார்டு கவுன்சிலர் ஷாஜகான் தலைமை யில் கமிஷனர் ஜெயலட்சுமியிடம் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் முறையிட்டனர். மாநகராட்சி தரப்பில், ‘ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் கட்டண விபரம் குறித்து, குத்தகை தாரரிடம் பேச்சு மூலம் தீர்வு காண்பது. மாட்டிறைச்சி விற்பனை யாளர்கள் சுகாதாரமான முறையில் மாடுகளை வதை செய்து, இறைச்சி விற்பனை செய்ய வேண்டும்‘ என, அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. கவுன்சிலர் ஷாஜகான் கூறியதாவது: மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஐந்து ரூபாய், ஏழு, 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்து கின்றனர். இங்கு மட்டுமே 50 ரூபாய் கேட்கின்றனர். இதுகுறித்து மேயரிடம் முறையிட்ட போது, ‘குத்தகைதாரருடன் பேசி நல்ல முடிவு எடுங்கள்‘ என தெரிவித் துள்ளார். ஆனால், மாநகராட்சி அதி காரிகள் ‘ரெய்டு‘ நடத்தி மிரட்டி உள்ளனர். இன்று (3ம்தேதி) நடந்த ‘ரெய்டு‘ தொடர்பாக கமிஷனர் ஜெயலட்சுமி, மேயர் செல்வராஜ் முன்னிலையில் பேச்சு நடத்தி னோம். குத்தகைதாரருடன் பேச்சு நடத்தி முடிவு காணச் சொல்லி உள்ளனர். இறைச்சி விற்பனை யாளர்கள் கூடிப்பேசி சுமூக முடிவு எடுப்பர், என்றார். கமிஷனர் ஜெயலட்சுமியிடம் கேட்ட போது, ”மாநகராட்சி பகுதியில் வதை செய்யப்படும் மாடுகளின் எண்ணிக்கையைப் பொருத்தே, வதைக்கூடம் அமைக்க முடியும். தற்போதைக்கு மாடுவதைக்கூடம் அமைக்க முடியாது. சுகாதாரமான முறை யில் வதை செய்துதான் இறைச்சி விற்பனை செய்ய வேண்டும். இதில் சமரசத்துக்கு இடமில்லை. ”சுகாதாரமற்ற முறையில் வதை செய்து, இறைச்சி விற்பனை செய்யப்பட்டால் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும். ஆடு வதைக் கூடத்தை பொருத்தவரை, மாநகராட்சியால் நிர்ணயிக்கப் பட்ட கட்டணமே வசூலிக்கப் படுகிறது. இதில், மாறுதலுக்கு இடமில்லை,” என்றார்.