தினமணி 20.11.2013
இலவச கொசுவலைகள் வழங்கும் திட்டம் : முதல்வர் துவக்கம்
தினமணி 20.11.2013
இலவச கொசுவலைகள் வழங்கும் திட்டம் : முதல்வர் துவக்கம்
ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள்
வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை
இன்று வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களின்
கரைகளையொட்டிய சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு
கொசுத்தொல்லையினைத் தவிர்க்கவும், கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா,
டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஐந்து லட்சம்
எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின்
முதற்கட்டமாக 1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 ரூபாய் செலவில் 78,184
கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.