தினமணி 29.04.2010
இளநிலை உதவியாளர் பணிக்கு பரிந்துரை
பெரம்பலூர், ஏப். 28: தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எம்.விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியம் மூலம், காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இந்தக் காலிப் பணியிடங்கள் முற்றிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்களாகும்.
இந்தப் பணிக்கு, பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களுக்கு பதிவு மூப்புகள் விவரப்படி பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
ஏதாவது ஒரு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு கிடையாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், முன்னுரிமையற்றோர் பொது 13.7.1993 வரை, பெண்கள் 13.7.1993 வரை.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், முன்னுரிமையற்றோர் பொது 31.8.2005 வரை, பெண்கள் 4.12.2006 வரை, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பொது 19.7.1995 வரை, பெண்கள் 19.7.1995 வரை.
எனவே, இப் பதிவு மூப்புகளுக்குள்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் இன மனுதாரர்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட எல்லைக்குள்பட்ட சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக்ததை தொடர்பு கொண்டு, தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.