தினத்தந்தி 26.06.2013
ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்
ஈஷா யோகா மையம் சார்பில் ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியம் துப்புரவு
தொழிலாளர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின்
தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு
ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி
வைத்தார்.

இதில் ஈஷா கிரியா என்ற யோகா பயிற்சியை யோகா ஆசிரியர்கள் துப்புரவு
தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி
ஆணையாளர் விஜயலட்சுமி, ஈஷா யோகா வகுப்புகளின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்
சுவாமி பிரபோதா, ஈரோடு ஈஷா யோகா மைய ஒருங்கிணைப்பாளர் சங்கர், மக்கள்
தொடர்பு ஒருங்கிணைப்பாளர் சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பயிற்சி 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தினமும் 120 பேர் என
மொத்தம் 600 துப்புரவு தொழிலாளர்களுக்கு யோகா பயிற்சி
கற்றுக்கொடுக்கப்படுகிறது.