தினத்தந்தி 17.07.2013
உசிலம்பட்டி நகராட்சியில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம்
உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் கடந்த
சில வாரங்களாகவே குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. பொதுமக்கள் கூடுதல்
விலை கொடுத்து மினரல் வாட்டர் கேன்களை வாங்கி பயன்படுத்தினர். நடுத்தர
மக்கள் உவர்நீரையே குடிநீராக பயன்படுத்தினர். பலர் தொலைதூரங்களுக்கு சென்று
தண்ணீர் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் 24 வார்டுகளிலும் டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க
நகராட்சியில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 24 வார்டுகளுக்கும்
அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவித்து டிராக்டர் மூலம்
குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனை நகராட்சி தலைவர் பஞ்சம்மாள்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைவருக்கும் ஒரே அளவில் குடிநீர் கிடைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.