தினத்தந்தி 04.10.2013
உடுமலையில் மரக்கன்றுகள் நடும் விழா
உடுமலை காந்தி நகர் அருகே நடை பயிற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தும் பணி இன்று நடந்தது.
அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. உடுமலை மக்கள்
பேரவை, ஆரன்யா அறக்கட்டளை காந்திநகர் ரோட்ராக்ட் சங்கம், அபெக்ஸ் சங்கம்,
இன்னர்வீல் சங்கம், நடை பயிற்சியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நகராட்சி
துப்புரவு பணியாளர்களும் இந்த பணிகளை மேற் கொண்டனர்.
இதில் நகராட்சி தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, உடுமலை மக்கள் பேர
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர்.சிவசண்முகம், ஆரன்யா அறக்கட்டளை நிர்வாக
அறங்காவலர் ஆர்.நந்தினி ரவீந்திரன், செயலாளர் ஏ.கார்த்திகேயன் ஆலோசகர்
வக்கீல் டி.ராஜசேகரன், அபெக்ஸ் சங்க தலைவர் எம்.கருணாநிதி, இந்திய மருத்துவ
சங்க தலைவர் டாக்டர் இ.ராமதேவி, நகைக்கடை அதிபர் கே.மணியன், சுகாதார
ஆய்வாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.